Saturday, September 4, 2010

கணினியில் வளரும் ஆதித் தாயின் காடுகள்

Thursday, September 2, 2010

அநாதி சொரூபக் கவிதை

அநாதி சொரூபக் கவிதை

Tuesday, August 17, 2010

மென்பொருள் வன்முறை

மென்பொருள் வன்முறைகள்
திலகபாமா

ஒரு ஊர்ல ஒரு பாட்டி இருந்தாளாம். மரத்தடியில் வடை சுட்டாளாம். காக்கா வடையைத் திருடிப் போய் மரத்தில் அமர்ந்ததாம்.பசியோடு வந்த தந்திர நரி காக்கையிடம் பாட்டுப் பாடச் சொல்லிக் கேட்டதாம். காக்கை பாட வடை கீழே விழ நரி எடுத்துக் கொண்டு ஓடியதாம்
திருடிய காக்கா தின்ன முடியாது ஏமாந்து பறந்ததாம்
1970 களில் எம் பாட்டி சொன்ன கதையாய் இருந்தது.
பாட்டி சுட்ட வடை எடுத்து வந்த காகம் மரத்தில் இருக்க தந்திர நரி ஏய்க்கப் பார்த்ததாம். “அழகிய குரல்” என்று சொன்ன பொய்யில் புத்திசாலிக் காகம் ஏமாறாது வடையைக் காலில் வைத்துப் பாட ஏமாந்த நரி பசியோடு சென்றதாம்.
2010 என் மகள் சொல்லும் கதையில் 70 களில் திருட்டுக் காகமாய் இருந்த பார்வை, புத்தி சாலிக் காகமாய் மாற்றப் பட்டு நரியிடமிருந்து பிழைத்த விதத்தில் திருடு மறக்கடிக்கப் பட்டும் விட்டது.பிரச்சனைகள் புதிதாய் முளைக்க முளைக்க சவால்கள் மறக்கப் பட்டு புதிய அர்த்தங்களுக்குள் அதன் களவாடித் தனங்களை மறைத்துக் கொள்கின்றன.
பத்தாண்டுகளுக்கு முன் வெளிநாட்டு வேலை தேடும் மோகமாய் குற்றஞ் சொல்லிக் கொண்டிருந்த நாம், தவிர்க்க முடியாது போன உலகமயமாக்கல் தாராளமயமாக்கல் உலகமே சிறு கிராமமாய் மாறிப் போனதின் விளைவாக வெளிநாடு போய் வேலை என்பதை இயல்பாக்கிப் போனோம்
இன்று “பிரதேசத்திற்குரியவர்களாக சுருங்கிப் போகாதீர்கள்” எனும் பரந்துபட்ட மனப் பான்மையின் முன்னால் அந்நிய அடிமைக் கூலிகளாய் உங்கள் அறிவாளித்தனங்களை விற்று விடாதீர்கள் என்று வெளிநாட்டில் வேலை தேடும் மோகம் கொண்ட இளைய தலைமுறைக்கு சொல்லிக் கொண்டிருந்ததை மறந்து போனோம்.
ஆனால் சொந்த நாட்டிலேயே வலைத் தளங்களும் மென் பொருள் வடிவமைப்புகளும் உள்நாட்டு உற்பத்திக்கு ஒரு பயனும் தராத, வெளிநாட்டு முதலாளிகளுக்கு இங்கிருந்து அடிமைக் கூலியாய் வேலை செய்யும் மனோநிலையை அதன் அதிகச் சம்பளம் எனும் பசுத்தோல் போர்த்து புலிகளாக உலவ விட்டுக் கொண்டிருக்கிறோம். அவை இரவுகள்ல் யாரும் அறியாப் பொழுதினில் இரத்தம் குடித்தபடி இருக்கின்றன.
பயோ டெக்னாலஜி மெக்கானிகல் இப்படி எத்துறையில் பட்டம் பெற்றிருப்பினும் 30000, சம்பளம் என்பதில் மெய்மறந்து மென்பொருள் வடிவமாக்கலில் அதுவும் வெளி நாட்டு முதலாளிகளுக்கு வடிவமைப்பதில் ஓயாது குளிரில் உறைந்த படி வேலை செய்யும் படித்த கூலிகளாக , படித்த இயந்திரங்களாக ,சுரணையற்று வேலை செய்பவர்களுக்கு, நாங்கள் நம்பிக்கை இழக்கவைக்கப் பட்டு சொன்னதையே திருப்பச் சொல்லும் செய்ததையே திரும்பச் செய்யும் அடிமைகளாக மாற்றப் பட்டு விட்டோம் என்பதையும் அது மனிதனில் மென்பொருள் நிகழ்த்தும் வன்முறை என் உணருவார்களா, உணர முடியா வண்ணம் சம்பளமும் ஒரே மாதத்தில் அது தந்து விட்ட சுகவாழ்வும் கண்ணை, புத்தியை மறைத்து நிற்கிறது.

மென் பொருள் நிறுவனங்களுக்குள் கணிணியின் முன் ‘எண்டர்’, ‘டேப்’ இப்படி பொத்தான்களில் நாளை எளிமைப் படுத்திச் சுருக்கி விட்டு ஆணும் பெண்ணும் சுதந்திரமாய் இருப்பதாய் சொல்லிக் கொள்கின்ற தருணங்களுக்கு அப்பால் யாவரும் ஒருவர் மேல் ஒருவர் நம்பிக்கையற்றவர்களாகவும் பார்க்காத நேரத்தில் அடுத்தவர் மனத்தை வேவு பார்க்கிறவர்களாகவும் , சம்பளமும் தொழிலும் இருக்கின்ற நினைப்பில் மாறுதல்களை எதிர்கொள்ள தயங்குபர்களாகவுமே இருக்கின்றார்கள்.
எனக்குத் தெரிந்த பெண் ஆண்களோடு சரிநிகராக பழகி விட மென்பொருள் நிறுவனத்தில் வாய்ப்பு நேர்ந்து விட்ட போதும் அது தரவேண்டிய தைரியத்தை விட சந்தித்து விட்ட ஆண்களின் பொய்மையில் பார்க்கின்ற எல்லார் பேரிலும் அவநம்பிக்கையோடு கேள்வி கேட்பதையே வளர்த்திருக்கின்றாள். அந்த அவநம்பிக்கை தந்த பயம் அவள் வீட்டில் அவளுக்கு பார்த்திருக்கின்ற பார்த்த எல்லா வரன்களிலும் ஏதாவதொரு குற்றம் சொல்லவே வைக்கின்றது. இன்னும் அவள் 32 வயது அம்மா அப்பாவோடு வரன் தேடிக் காத்திருக்கும் பிரம்மச் சாரிணி
வேலையும் பொருளாதார பலமும் அவளுக்கு அவள் கால்களுக்கு பலமாகிப் போயிருக்க அவள் திருமண சாகரத்தில் வருகின்ற இடமாற்றம், சூழல் மாற்றம், இவற்றில் நீந்துகின்ற இலகு மனத் தன்மையை இழந்து கட்டி தட்டிப் போய் கரையிலேயே நிற்கின்றாள்.
வெறும் பி .ஏ பட்டம் முடித்து வீட்டுக்குள்ளே இருந்த பெண்கள் ஏற்றுக் கொள்ள முடிந்த மாறுதல்களை மாறுதல்களினால் வரும் பிரச்சனைகளை சந்தித்த திடமும் குழைவும், ஸ்திரமென நம்பியிருக்கின்ற வேலை கொண்ட பெண்களிடம் இல்லை என்பது கண்கூடு இன்னமும் சொல்லப் போனால் அவர்கள் பற்றியிருக்கின்ற வேலை பறி போனால் வாழ்க்கையே நமதில்லை எனும் அவநம்பிக்கையையும் சேர்த்தே வளர்த்திருக்க்றது என்று சொன்னால் மிகையில்லை. இன்னும் இதுவரை ஆண்களையே சார்ந்து பழகியிருந்த பெண்கள் , அதை பொருளதார முன்னேற்றத்தில் சுயச் சார்பு அடைந்து விட்டார்கள் என்று நம்புவதை பொய் என நிரூபித்து இப்பொழுது இவர்கள் வேலையை சார்ந்து இருக்கப் பழகி இருக்கின்றார்கள் என்பதுவே நிஜம்.
திருமணம் சமூக அந்தஸ்தாகிப் போன இடத்திலிருந்து கொண்டு கண்ணீர் காய்ந்து போன விழியோடு கட்டி தட்டிப் போன மகளை அடித்தால் நொறுங்கி விடுவாளோ எனும் அக்கறையோடும் இலகுவாகி நீந்த முடியாதவளாய் இருக்கிறாளே எனும் கவலையோடும் “ நெஞ்சு வலிக்கிறது” “ பிள்ளைகள் எங்களைப் புரிந்து கொள்ளவேயில்லை” என்று பேசும் தகப்பன் குரலுக்கு கைபிடித்து அமர்த்திப் போகும் தாயை மென்பொருள் வன்முறையின் குத்தில் வழியும் இரத்தமும் வேதனையும் மூழ்கடித்துக் கொண்டிருக்கின்றது.
நன்றி.www.adhikaalai.com

Saturday, July 17, 2010

தமிழக அரசு சின்னத்திற்கு அவமரியாதை

இவர்கள் இன்னது செய்கிறோமென்று அறியாதவர்கள்-
தமிழக அரசு சின்னத்திற்கு அவமரியாதை

-திலகபாமா

எனது பையன் தனது ஆங்கிலச் சிறுகதையில் ஒரு வரி சொல்லிப் போனான். அதன் பொருள் ‘நாம செய்கின்ற தவறை எல்லாரும் சரின்னு சொல்லனும்னா அந்த தவறை அனைவரையும் செய்ய வைத்து விடனும்னு’.
ஊரெல்லாம் தமிழ் நாடெல்லாம் சேர்ந்து கொண்டாடி முடித்து விட்ட செம்மொழி மாநாடு ஒரு ஆயிரம் பக்க நாவல் போல. எத்தனை தான் குறை சொன்னாலும் எவ்வளவு மோசமான எதிர் கருத்தியல் உடையவரும் கூட ஆயிரம் பக்கத்தில் ஏதாவது ஒரு பக்கத்தை, பக்கத்து எழுத்தை வாசித்து சிலாகிக்க நேர்ந்து விடும். அப்படியிருக்க வாசிப்பவர்கள் ஆயிரம் பேராய் இருக்கின்ற பட்சத்தில் ஒட்டு மொத்த நாவல்லும் பாராட்டப் பட்டது என்று சொல்வதற்கான சாத்தியங்களும் எல்லாரும் பாராட்டினார்கள் என்று சொல்லி விடக் கூடிய அபாயமும் எப்படி அந்நாவலுக்கு நேருமோ அப்படித்தான் செம்மொழி மாநாட்டு விசயத்திலும் நிகழ்ந்து போனது. நிகழ்ந்து முடிந்த மிகப் பெரும் விழாவில் ஏதாவது ஒரு விசயத்தையாவது பாராட்ட எல்லாருக்கும் நிறையவே இருந்தது என்பதற்கு அப்பால் அதன் இலக்கின்மை, தன் முனைப்பு, மக்கள் வரிப்பணம் செலவழிக்கப் பட்டு , தன் அடையாளமாய் நிறுவிக் கொண்டது, கோவை நகரமே ஒரு வார உற்பத்தி அற்றுப் போனது ஊரான் வீட்டு நெய்யே என் பெண்டாட்டி, துணைவிமார்களின் கையே , இத்யாதி,இத்யாதி என்பதெல்லாம் அடிபட்டுப் போனது கூட வருத்தமில்லை
ஆனால் ஒரு அரசாங்கப் பேருந்தில் தனியார் விளம்பரம் ஒட்டுவதற்கு அனுமதி கிடையாது என்றிருக்கின்ற ஒரு அரசாங்கத்தின் சொத்தின் மேல் அந்த அரசாங்க சொத்தை விட பெருமதிப்பு வாய்ந்த தமிழ்நாட்டின் அரசாங்கச் சின்னத்தின் மேல் கூசாமல் ஒரு மாநாட்டு விளம்பரப் பதாகையை, லோகோவை எப்படி ஒட்ட முடியும்.
சாதாரண ஒரு குடிமகன் கூட தன் வீட்டுச் சுவற்றில் விளம்பரம் ஒட்டினால் சண்டைக்கு வருகின்றான். ஏற்கனவே எழுதப் பட்டிருந்த ஒரு அரசியல் தலைவரின் பேரின் மேல் அல்லது படத்தின் மேல் இன்னொரு எழுத்தோ போஸ்டரோ ஒட்டப் பட்டால் நஸ்டஈடு கேட்கிறார்கள்
எனது மருத்துவமனை திறப்புவிழா போஸ்டரை சுவற்றில் எழுதப் பட்ட தொல்.திருமாவளவன் பேரின் மேல் ஒட்டி விட்டார்கள்( ஒட்டியவர்க்ள் எழுதப் படிக்கத் தெரியதவர்கள் என்பது வேறு விசயம்) எனபதற்கு மருத்துவமனையில் வந்து தகராறும் நஸ்டஈடும் பெற்றுச் சென்றார்கள்.
ஒரு மத அடையாளத்தின் மேல் இன்னொரு அடையாளம் விழுந்து விட்டால் குத்துப் பலி கொலைப் பழி ஆகி விடுகிறது.
அப்படியிருக்க அரசே தம் சின்னத்தின் பெருமை உணராது ஒட்டி விட முடியுமா?
பேருந்தில் இருக்கின்ற தமிழக அரசின் சின்னத்தை படமெடுத்து தரவேண்டுமென்ற என் கோரிக்கையைத் தொடர்ந்து புகைப்படக் காரார் கேட்டார் ‘திருவள்ளுவர் சிலையிருக்கின்ற படத்தையா?” என்று அதிர்ந்து போனேன் மனங்கள் எப்படி மாற்றப் பட்டு விட்டது என்று.
ஒட்டுமொத்தமாக மாற்ற பட்டு விட்டதாலேயே அல்லது அரசாங்க சின்னத்தின் மீது மறைத்து ஒட்டப் பட்டு விட்டதாலேயே சனங்களின் கவனமும் அதில் கேள்வி எழுப்ப மறந்து போனதா? சில மாதங்களுக்கு முன் தேசியக் கொடியை கேக்கில் போட்டு வெட்டிய போது எழுந்த சமூகக் கோபங்கள் சின்னத்தின் மேல் பசையிட்டு மறைத்து ஒட்டப் பட்டு விட்ட பதாகைகைகளின் மேல் எழுந்திருக்க வேண்டாமா?
பேருந்தில் மாநாட்டுப் பதாகைகள் சரி அரசாங்கமே மொழியின் சார்பில் முன்னின்று நடத்துகின்ற பெருமை மிகு விழாவின் பதாகைகள் தமிழக மூலை முடுக்கெல்லாம் சென்று சேர சரியான இடம் வழி பேருந்துகளில் ஒட்டுதல் என்பது சரிதான் அதைச் சரியாக தமிழக சின்னத்தின் மேலே அடித்து ஒட்டுவது என்பது அதீதமான தவறானது அல்லவா? தவற்றை காண்கின்ற இடமெல்லாம் செய்து விட்டதால் சரியென்று ஆகி விடுமா என்ன?
தனியார்கள் இதைச் செய்திருந்தால் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டிய அரசே செய்ததால் இது சகித்துக் கொள்ள வேண்டியதாகி விட்டதா?
பொதுமக்களின் முணு முணுப்பாய் இருந்து கொண்டிருக்கின்ற கேள்வி ஏன் அரசியல் சமூகத் தலைவர்களிடம் எழும்பாமல் போயிற்று

ஆயிரம் பக்க நாவலில் ஏதாவது ஒரு சம்பவத்தை அல்லது எழுத்தை வாசகன் பாராட்டி விட்டுப் போக வேண்டியிருப்பது போல மக்களுக்கு ஒரு நிர்பந்தமா?
செம்மொழி மாநாட்டை பிரபலப்படுத்தும் “ஆர்வக் கோளாறில்” நேர்ந்து விட்ட பிழையா?”
அல்லது ஆளுக்கொரு பக்கத்தை பாராட்டி விட்டுப் போக அதைக் கண்டு மிரண்டு நிற்கின்ற வியப்பில் தவறுகள் அடிபட்டுப் போவது போல அர்சின் தப்பித்தல் மனோபாவமா?
ஒரு அரசாங்கச் சின்னம் அதற்கு நடந்திருக்கின்ற அவமரியாதையை மக்கள் சமூக விமர்சகர்கள் அதிகாரிகள் அரசியல் தலைவர்கள் எல்லாரும் பார்த்திருந்து இயல்பென கடந்து போனது சுயமரியாதை, பகுத்தறிவு இவ்வார்த்தைகளால் உருவாகிய கட்சிகள் அதை மறந்து விட்டு நடத்தும் ஆட்சி என்பதாலா?
” மன்னன் எவ்வழி மக்களும் அவ்வழி”

பின் குறிப்பு: தமிழக அரசின் சின்னம் இந்து மத அடையாளத்தை தாங்கியிருக்கத்தான் வேண்டுமா? என்று கேள்வி எழுப்பப் பட்டதன் விழைவாக சப்தமில்லாது அரசு சின்னத்தை மாற்றி விடுவதற்காக பார்க்கும் ஒத்திகையா இது என்று சந்தேகத்தை கிளப்பியிருப்பதுவும் மறுப்பதற்கில்லை
நன்றி www.adhikaalai.com

Sunday, June 13, 2010

அரூபங்களின் ரூபம்

மருகால்தலை படங்கள்

பெயிண்டால் மறைந்து போன கல்வெட்டுகள்
இன்றைய வழிபட்டுத் தலமாகியுள்ள சமணர் படுகை
குகை போன்ற வாயில்
இன்றைய விஸ்வரூபம்

ஆண்டிச்சி பாறை சமணக் கோவில்

புடைப்புச் சிற்பமாய் விநாயகர்
பெண் உருவம்
குடைவரைக் கோவில்

செயற்கை நீர் நிலைகள்




சீவலப் பேரி அருகில் இருக்கின்ற நீர் நிலைகள்.இயற்கையானது அல்ல. வெடி வைத்து தகர்க்கப் பட்ட பின் உருவாகியிருக்கின்ற பள்ளங்கள்